/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_58.jpg)
ஃப்ரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் குருமூர்த்தி. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூனம் பஜ்வா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ‘குருமூர்த்தி’ படம் நேற்று (09.12.2022) திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக ஒரு போலீஸ் படம் என்றாலே அதுவும் கமர்சியல் படமாக எடுக்கும் பொழுது ஒரு வில்லனுக்கும் ஹீரோவுக்குமான கேட் அண்ட் மவுஸ் கேமாகத்தான் பெரும்பாலும் படம் இருக்கும். ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடக்கும் ஒரு திருட்டு சம்பவத்தை ஒரு போலீஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்ற புதுமையான முயற்சியைப் படக்குழு கையிலெடுத்துள்ளார்கள்.
இதனால் குடும்ப ரசிகர்கள் வரும் நாட்களில் திரையரங்கிற்கு அதிகம் வந்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)